பிர்மிங்ஹாமில் இருந்து கானரி தீவுக்கு புறப்பட்ட விமானத்தில் எமிலி ஓ கான்னர் என்ற 21 வயதுப் பெண் பயணி மேலாடையாக ஒரு பிராவையும், இறுக்கமான ஒரு பேண்ட்டையும் மட்டும் அணிந்து கொண்டு ஏறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் முறையாக ஆடை அணியுமாறும் அல்லது விமானத்தை விட்டு இறங்குமாறும் வலியுறுத்தினர்.
அவரது ஆடை பாணி சக பயணிகளை குற்றம் செய்யத் தூண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ஆடை அலங்காரத்துடனான புகைப்படத்தை வெளியிட்ட எமிலி தனது ஆடை பாணி மனதை பாதிக்கும் வகையில் ஊள்ளதா என சக பயணிகளிடம் கேட்டதாகவும், ஒரே ஒரு நபர் தவிர மற்றவர்கள் அவ்வாறு இல்லை எனத் தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார் .
தன்னை தரக்குறைவாக பேசிய அந்த நபர் மீது விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னை வெளியேற்றுவதற்காக அவர்கள் தனது உடைமைகளை விமானத்தை விட்டு வெளியில் எடுத்துச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இறுதியில் விமான நிலையத்தில் காத்திருந்த தனது உறவினரின் மேல் ஜாக்கெட்டை வாங்கி அணிந்தபிறகே தான் விமானத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் இது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் என்றும் அவர் கூறியுள்ளார்.