ஒருசில நேரங்களில் குழந்தை வெளியேற முயற்சிக்கும்போது தாயின் சிறுநீர்ப் பையை அழுத்துவதுண்டு. இதன் காரணமாக தாயின் சிறுநீர்ப்பைக்கு பிஸ்டுலா ஆபத்து நேரிடும் என கருதப்படும்போது சிசேரியன் செய்யப்படுகிறது.
பிரசவவலி மற்றும் பிரசவ மரணம் பற்றி காலம் காலமாக இருந்துவரும் அச்சம், பயம் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டு, சுகப்பிரசவம் செய்துகொள்ளும் தைரியமும், பொறுமையும் இல்லாத பெண்ணுக்கு சிசேரியன் செய்யப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுக்குள் இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் சிசேரியன் செய்வதே பாதுகாப்பாக கருதப்படுகிறது.
முதல் குழந்தை சிசேரியன் மூலம் எடுக்கப்பட்டது என்றால், அடுத்தடுத்த கர்ப்பமும் சிசேரியன் மூலம் மேற்கொள்வதே சரியானது. இதுவரை நாம் பார்த்தது தவிர, சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுப்பதற்கு மேலும் சில பிரச்னைகளும் காரணமாக அமைவதுண்டு. அவற்றை இனி பார்க்கலாம்.