துவர்ப்பு – இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு – தசையை வளர்க்கின்றது
புளிப்பு – கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு – எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு – நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு – உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
உணவில் அனைத்து வகையான சுவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் ’உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று சொன்னார்கள்.
இந்த ஆறு சுவைகளும் நிரம்பிய உணவினை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு எளிதில் நோய்த் தாக்குதல் நிகழாது. என்ன சுவை பிடிக்குமோ அதனை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வது நிச்சயம் ஆபத்தான பழக்கமாகும். அதனால்தான் சாக்லேட் அதிகம் சுவைக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் நிகழ்கிறது. சரிவிகித உணவு என்பதைப் போன்று சரிவிகித சுவையும் அனைவருக்கும் அவசியம் என்பதால்தான் விருந்து நிகழ்ச்சிகளில் அறுசுவை உணவுகள் பரிமாறுவது தமிழர் வழக்கமாக இருந்தது.