ஹேர் டைகளில் ப்ளீச் உருவாக்க, ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் ரசாயனத்துடன் அம்மோனியா சேர்க்கப்படுகிறது. இந்த இரசாயனங்கள் வெளிப்பாடு காரணமாக ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். ஏற்கனவே ஆஸ்துமா அல்லது பிற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த இரசாயனங்கள் தொடர்பினால் மோசமான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.
ஹேர் டையில் உள்ள பி-ஃபினிலெனெடியமைன் என்ற வேதிப்பொருள் சருமத்தில் உறிஞ்சப்படுவதால் ஒவ்வாமை தொடர்பான தோல் அழற்சி ஏற்படுகிறது. காண்டாக்ட் டெர்மடிடிஸில் ஒரு ஆய்வின்படி, ஹேர் டைகளின் பயன்பாடு ஒவ்வாமை தொடர்பு தோல் அழற்சியுடன் தொடர்புடையது என்பது அறியப்படுகிறது.
கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் ஹேர்டை பயன்படுத்துவது தாய்க்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. ட்ரைக்காலஜி இன்டர்நேஷனல் ஜர்னலில் ஒரு ஆய்வில், 96% பெண்கள் கர்ப்பம், குழந்தைக்கு பாலூட்டும் காலம் போன்ற காலகட்டத்தில் ஹேர் டை பயன்பாடு பாதுகாப்பற்றது என்று வெளிப்படுத்தியுள்ளனர்.