குழந்தை பிறந்த பத்தாவது நிமிடத்திற்குள் தொப்புள் கொடி, ரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை முறைப்படி சேகரிக்க வேண்டும். இந்த ஸ்டெம் செல்களை 48 மணி நேரத்துக்குள் முறையாகப் பிரித்து பாதுக்காக்கத் தொடங்கினால் வேண்டிய காலம் வரையிலும் பயன்படுத்தலாம்.
புற்று நோய் போன்ற பரம்பரை குறைபாடுகளைக் களைவதில் ஸ்டெம் செல்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மூளைக் கோளாறு, நரம்புக் கோளாறு, உடல் உறுப்புகள் சரிவர இயங்காமை, இதய நோய்களை குணப்படுத்துவதற்கும் இந்த சிகிச்சை பயன்படுகிறது.
இந்த ஸ்டெம் செல்களை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கமுடியும் என்பதால், மனிதன் உயிர்வாழும் காலத்தை நிச்சயம் நீட்டிக்க முடியும். ஒரு குழந்தை பிறந்ததுமே ஸ்டெம் செல்லை எடுத்து பாதுகாக்கும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இயலும்.