ஆந்திராவைச் சேர்ந்தவர் தருணி. இவர், சிறு வயதிலேயே படிப்பிற்காகச் சென்னை வந்து, இங்கேயே திருமணமாகி, செட்டில் ஆகிவிட்டார். 2 குழந்தைகள் பிறந்த நிலையில், வேலைக்கு போக முடியாமல், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்து வந்த தருணிக்கு, வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் பிசினஸ் செய்யும் ஐடியா தோன்றியது. அதன்பெயரில், நண்பர்கள் மற்றும் கணவரின் ஆலோசனைப்படி, ஃபேஷன் ஜூவல்லரி பிசினஸை தொடங்கும் முடிவுக்கு வந்தார்.
இந்த தொழிலை கஷ்டப்பட்டு தொடங்கி, கைக்காசை போட்டு தொழில் தொடங்கிய தருணி, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று, நவீன வகையில் பல்வேறு நகைகளை வாங்கிவந்து, வீட்டில் இருந்தபடியே விற்க தொடங்கியுள்ளார். இது தவிர, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும், தனது தொழிலை இவர் விரிவுபடுத்தியுள்ளார். தற்போது, மாதந்தோறும் சராசரியாக, ரூ.4 லட்சம் வரை சம்பாதிப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில், வியாபாரம் டல்லாக இருந்தாலும், போகப் போக முன்னேற்றம் கிடைத்தது என்றும், எந்த தொழிலையும் விடாமல் செய்தால்தான், எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.