·
தாய்ப்பாலில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் வைட்டமின் டி இல்லை என்பதால், சில குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகலாம்.
·
குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனைபடி, தாய்ப்பாலுடன் வைட்டமின் டி ஊட்டச்சத்து கொடுக்கவேண்டியது அவசியம்.
·
சில குழந்தைகளுக்கு கால்சியம், பாஸ்பரஸ் குறைபாடு காணப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
·
குறை பிரசவ குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதுபோன்ற குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யவேண்டியது அவசியம்.
தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் போதும் என்று சொல்வது உண்மை என்றாலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் இது பொருந்தாது என்பதை தாய் உணரவேண்டும். அதனால் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டச்சத்து மருந்துகள் கொடுக்கப்படுவது அவசியம். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.