கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக அனைத்து விதமான சத்துக்களும் தேவை. போதிய ஊட்டச்சத்து அவர்களின் உடலில் சேர்ந்தால் மட்டுமே அவர்களுக்கு எந்த விதமான உடல் நல பிரச்சனைகளும் ஏற்டாமல் இருப்பதோடு, குழந்தையும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். ஆனால், அதிலும் சில குறிப்பிடத்தக்க சத்துக்கள் அதிக அளவில் கர்ப்ப காலத்தில் தேவைப்படுகின்றது. இந்த வகையில், கால்சியம் சத்து ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்ப காலத்தில் குழந்தையின் எலும்புகள் வளர்ச்சி அடைய கால்சியம் சத்து தேவைப்படுகின்றது. அது மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள், மற்றும் தசைகள் நல்ல கட்டமைப்பை பெற கால்சியம் உதவுகின்றது. இதனாலேயே, பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகம் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் அதில் பெண்களுக்கு கால்சியம் சத்து எவ்வளவு முக்கியமானது? கால்சியம் சத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் என்ன? என்று அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் எவ்வளவு கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும்?
கர்ப்ப காலத்தில் அவரவர் வயதிற்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளும் கால்சியம் அளவும் மாறும். இதனால், தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் ஆரோக்கியத்தோடு இருக்கலாம். எவ்வளவு கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இங்கே சில குறிப்புகள்:
19 முதல் 50 வயது வரை இருக்கும் பெண்கள்
இந்த வயதிற்குள் இருக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அளவை அவர்கள் குழந்தை பிறந்த பின்னரும் தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கால்சியம் கிடைக்கும்.ஆக இந்தக் காரணத்தால் கால்சியம் சத்து எடுத்துக் கொள்ளுதல் கட்டாயப்படுத்தப் படுகின்றது.
18 வயதிற்குள் இருக்கும் பெண்கள்
18வயதிற்குள் இருக்கும் இளம் பெண்கள் ஒரு நாளைக்கு 1300 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பிரசவத்திற்கு பின்னரும் குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் தொடர வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகள்
நிறைய மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவை என்பதற்காக பல வகை வகையான மாத்திரைகளை உண்ண பரிந்துரைப்பார்கள். ஆனால் அவை நிச்சயம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் சில ஒவ்வாமையை காலப் போக்கில் ஏற்படுத்தி விடும். ஆனால், இயற்கையாகவே உங்கள் உணவில் ஒரு சில முக்கிய பொருட்களை சேர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலுக்குத் தேவையான கால்சியம் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு கிடைத்து விடும். அந்த வகையில், உங்களுக்காக, கர்ப்ப காலத்தில் கால்சியம் அளவை அதிகரிக்க நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள், பின் வருமாறு.
- தினமும் சுமார் 400 மில்லி கிராம் தயிர்.
- சுமார் 400 மில்லி கிராம் அளவு பழ வகைகள்.
- 300 மில்லி கிராம் கொழுப்பு நீக்கப்பட்ட பால்
- 200 மில்லி கிராம் சாத்துக்குடி பழச்சாறு
- 200 மில்லி கிராம் சால்மன் மீன் அல்லது கால்சியம் நிறைந்துள்ள மீன் வகைகள்
- 100 கிராம் சர்க்கரை பூசணிக்காய்
இவை மட்டுமல்லாது, உங்கள் உணவில் தினமும் கீரை, ப்ராக்கோலி, முளை கட்டிய பயிர் வகைகள் என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை பசும் பாலை அருந்துவது நல்லது. கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில், அதிகம் கொழுப்பு நிறைந்த பாலையும் தவிர்ப்பது நல்லது. பருப்பு கீரை, வெந்தயக் கீரை, சுறா மீன், போன்ற உணவு வகைகளை உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.இவை உங்களது உடலின் தினசரி கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யும்.
கால்சியம் சத்தால் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக கால்சியம் அனைவருக்கும் தேவையான ஒரு சத்து. அதிலும் குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு, இது மிக முக்கியமான ஒன்று. இந்த வகையில், கால்சியம் எப்படி தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் உதவுகின்றது என்று பார்க்கலாம்:
கர்ப்பிணி பெண்களின் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
மருத்துவ ஆய்வின்படி, கால்சியம் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மன நிலையை
சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதனால் அவர்களது மன ஆரோக்கியம்
முதலில் நன்றாக இருகின்றது. இது ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகும். ஏனென்றால்,
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மனதில் பல மாற்றங்கள் ஏற்படும். இது
உடல் நலத்தையும் பாதிக்கும்.
உடலில் இருக்கும் கொழுப்பு சத்து குறையும்
கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே
தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதனால் உடலில்
அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பை குறைகின்றது.
எலும்புகளைப் பலப்படுத்தும்
கால்சியத்தின் ஒரு முக்கிய குணமே, எலும்புகளுக்குத் தேவையான சத்துக்களை
கொடுப்பது தான். இந்த வகையில், உங்கள் எலும்பை திடமாகவும், உறுதியாகவும்
வைத்துக் கொள்ள கால்சியம் அதிகம் உதவுகின்றது. அதனால், கர்ப்பிணி
பெண்கள் நிச்சயம் கால்சியத்தை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதுகுவலி வராது
கர்ப்ப காலத்தில் போதுமான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
உயர் இரத்த அழுத்தம் ஏற்படாது
கர்ப்பிணி பெண்கள் தேவையான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால்
உயர் இரத்த அழுத்த நோய் வராமல் காத்துக் கொள்ளலாம்.
பிரிஎக்லாம்சியா
கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணி பெண்களுக்கு,பிரிஎக்லாம்சியா போன்ற அபாயம்
ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்சனை வராமல் தடுக்க கால்சியம் பெரிதும்
உதவுகிறது.
பிரசவ வலியைத் தாங்க முடியும்
கர்ப்பிணி பெண்களுக்கும், பிரசவ காலத்தில் தங்களது எலும்புகள் வலுவோடு இருக்க உதவும். இதனால் பிரசவ நேரத்தில் ஏற்படும் வலியையும் தாங்கிக் கொள்ளும் பலம் அவர்களுக்கு கிடைகின்றது.
குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி மற்றும் எலும்புகளின் வளர்ச்சி
கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம்,
நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது.
இதனால், குழந்தையின் இருதயம் ஆரோக்கியமாக செயல் படுகின்றது.
அதனால், கால்சியம் உங்கள் உணவில் கட்டாயம் தினசரி உணவில் இருக்க
வேண்டும்.
கால்சியம் குறைப்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
- கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
பிரசவ காலத்தில் தாய்க்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் அறுவைசிகிச்சை பிரசவம் செய்ய வேண்டிய சூழலும் ஏற்படலாம். - மேலும், கால்சியம் குறைபாட்டால், குழந்தை பிறந்த பின் குழந்தைக்கு நரம்பியல் பிரச்சனை, முழுமையான உடல் வளர்ச்சி இல்லாமல் போவது, இருதயத்தில் பிரச்சனை என்று ஏதாவது ஏற்படக் கூடும்.
- பிரசவ நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- குழந்தை மிகவும் குறைந்த எடையில் பிறக்க வாய்ப்பு உள்ளது.
- கை கால் நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு சிறிய தாக்குதல் ஏற்பட்டால் கூட எலும்பு உடைய வாய்ப்புள்ளது.
- தசைப்பிடிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.கால்சியம் மிக அவசியமான ஒரு சத்து என்றாலும், நீங்கள் மற்ற சத்துக்களுக்கும் முக்கியத் துவம் கொடுக்க வேண்டும். அது தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் அனைத்து சத்துக்களும் சமமான மற்றும் தேவையான அளவு கிடைத்து இருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவும். இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
இதையும் படிக்க : வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?