ரிலையன்ஸ் ஜியோ போட்டியின் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், அதன் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த மாத ஊதிய நிலுவை இதுவரை வழங்கப்படவில்லை.
இதையடுத்து ஊதியத்தை வழங்க நிதி ஒதுக்குமாறு கோரி ஊழியர் சங்கங்கள் சார்பில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க நிறுவனத்தின் உள் நிதியாதாரங்களில் இருந்து 850 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என்றும் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர், கேரளா, மற்றும் பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலகங்களில் மூத்த அதிகாரிகள் தவிர் மற்றவர்களுக்கு ஊதிய வழங்கப்பட்டுவிட்டதாக பி.எஸ்.என்.எல். செய்தித் தொடர்பாளர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வெளியே வருவதற்கான எந்த திட்டமிடலும் பிஎஸ்என்எல்லிடம் இல்லை என்கிறார்கள். எனவே விரைவில் அந்த நிறுவனம் மூடப்படுவதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள்.