பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒரு தம்பதி சா பாவ்லோ நகர காவல் நிலையத்துக்கு வந்தனர். தங்கள் குழந்தைக்கு சுவாசம் நின்று போய்விட்டதாகவும் காப்பாற்றித் தருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டபோது போலீசார் குழப்பம் அடைந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய குழந்தையை அர்கள் ஏன் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர் என போலீசார் முதலில் குழம்பினாலும், பின்னர் அந்த தம்பதி பதற்றம் மற்றும் மனக் குழப்பத்தில் யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியாமல் காவல் நிலையத்தை அணுகியதைப் புரிந்துகொண்டனர்.
எனினும் குழந்தையைக் காப்பாற்ற தங்களால் ஆனதை செய்ய முடிவு செய்த போலீசார் குழந்தைக்கு முதலுதவியாக சில சுவாச சிகிச்சைகளை மேற்கொண்டனர். என்ன ஆச்சரியம் குழந்தை உடனடியாக சுவாசிக்க தொடங்கியது. இந்நிலையில் சற்று நிதானத்துக்கு வந்திருந்த பெற்றோர், குழந்தை மூச்சுவிடத் தொடங்கியதையடுத்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தையை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் இணையதளத்தில் பரவும் நிலையில் காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.