Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கொரோனாவுக்கு இத்தனை மூட நம்பிக்கையா… ப்ளீஸ் ஏமாறாதீங்க.

கொரோனா குறித்த கட்டுக்கதைகளை நம்பவேண்டாம் என்று அமெரிக்காவின் மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்த் துறைத்தலைவர் மற்றும் முதன்மை தர அதிகாரியாக உள்ள மருத்துவர் பாஹீம் யூனுஸ் அவர்கள் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இதனை பூ.கொ.சரவணன் தமிழில் கொடுத்திருக்கிறார்.

கதை 1: கரோனா வெயில் காலத்தில் காணமல் போய்விடும்.

தவறு. இதற்கு முந்தைய உலகத்தொற்றுகள் எதுவும் வானிலைக்கு ஏற்ப இயங்கவில்லை. மேலும் (அமெரிக்கா) வெயில் காலம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இதே வேளையில், தென் துருவத்தில் குளிர்காலம் எட்டிப்பார்க்க இருக்கிறது. கரோனா வைரஸ் உலகம் முழுக்கக் கடை பரப்பியிருக்கிறது.

கதை 2: வெயிற்காலத்தில் கொசுக்கடியால் கரோனா வைரஸ் வேகமாகப் பரவும

தவறு. இந்த வைரஸ் இரத்தத்தின் வழியாகப் பரவுவதில்லை. நோய்த்தொற்று உள்ளவர்களின் சுவாசத் துளிகள் (தும்மல், இருமலின் போது வெளிப்படும் திரவம்) மூலமே வைரஸ் பரவுகிறது. இந்நோய் கொசுக்களால் பரவுவதில்லை.

Thirukkural

கதை 3: பத்து நொடிகளுக்கு அசௌகரியம் இல்லாமல் மூச்சை இழுத்துப் பிடித்தால் கரோனா நோய்த்தொற்று இல்லை.

தவறு. கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான பெரும்பாலான இளவயதினர் பத்து நொடிகளுக்கு மேல் மூச்சை எளிதாக இழுத்துப் பிடிக்க இயலும். கரோனாவால் பாதிக்கப்படாத முதியவர்களால் இப்படி மூச்சை இழுத்துப் பிடிக்க இயலாது.

கதை 4: கரோனா நோய்த்தொற்றைச் சோதிக்க மறுக்கிறார்கள் என்பதால் நாம் ரத்த தானம் செய்ய வேண்டும். அப்போது ரத்த வங்கி அதனைச் சோதிக்கும்.

எந்த ரத்த வங்கியும் கரோனா நோய்க்கிருமி உள்ளதா என்று பரிசோதிப்பது இல்லை. ரத்த தானம் உயிர் காக்கும் அரும்பெரும் செயல். நாம் நல்ல நோக்கங்களோடு அதனைச் செய்வோமே.

கதை 5: கரோனா வைரஸ் தொண்டையில் தான் வாழ்கிறது. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்த வைரஸ் வயிற்றுக்கு அடித்துச் செல்லப்படும். அங்கே இருக்கும் அமிலம் வைரஸை தீர்த்து கட்டிவிடும்.

வைரஸ் தொண்டை வழியாக உடம்புக்கு நுழையலாம் என்றாலும் அது நம்முடைய செல்களுக்குள் ஊடுருவி விடுகிறது. அதனைத் தண்ணீரைக் கொண்டு கழுவ எல்லாம் முடியாது. நிறையத் தண்ணீர் குடிப்பது உங்களை அடிக்கடி கழிப்பறை நோக்கி ஓடவேண்டுமானால் வைக்கும்.

கதை 6: முடிந்தவரை மக்கள் கூட்டத்திடம் (சமூகத்திடம்) இருந்து தள்ளியிருப்பது, பொது இடங்களில் புழங்காமல் இருப்பது (sஷீநீவீணீறீ பீவீstணீஸீநீவீஸீரீ)அதீத எதிர்வினையாகும். வைரஸ் அப்படியொன்றும் பெரிய கேட்டை எல்லாம் விளைவித்து விடாது.

முடிந்த வரை மக்கள் கூட்டத்திடம் இருந்து தள்ளியிருப்பது, பொது இடங்களில் புழங்காமல் இருப்பது நோய்த்தொற்றைப் பெருமளவில் குறைக்கும். இந்த வைரஸ் ஆபத்துமிக்க ஒன்று.

கதை 7: கார் விபத்துக்களால் உலகம் முழுக்க ஆண்டிற்கு 30,000 மக்கள் சாகவில்லையா? ஏன் கரோனாவைக் கண்டு இத்தனை அச்சம், கூப்பாடு?

கார் விபத்துகள் வேகமாகத் தொற்றிக்கொள்பவை அல்ல. கார் விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மூன்று நாளுக்கும் இரண்டு மடங்கு அதிகரிப்பது இல்லை. அவை பெரும் பதற்றத்தையும், பொருளாதாரச் சரிவையும் தோற்றுவிப்பது இல்லை.

கதை 8: சோப், தண்ணீரைக் கொண்டு கையைக் கழுவுவதை விட சானிடைசர் பயன்படுத்துவது மேலானது.

தவறு. சோப், தண்ணீரைக் கொண்டு நன்றாகக் கையைத் தேய்த்து கழுவுவது உங்கள் சருமத்தில் உள்ள கரோனா கிருமியை வெளியேற்றுகிறது. (கரோனா கிருமியால் தோல் செல்களை ஊடுருவி கொண்டு செல்ல இயலாது). மேலும், உங்கள் கைகள் அழுக்காகி இருந்தால் அதனைச் சுத்தப்படுத்தவும் செய்கிறது. ஆகவே, சானிடைசர் சூப்பர் மார்க்கெட்டில் தீர்ந்து விட்டது என்று பீதியடைய வேண்டாம்.

கதை 9: கரோனா வைரஸை தடுக்க உங்களின் வீட்டின் அத்தனை கதவுகளின் கைப்பிடியையும் கிருமி நாசினியை கொண்டு கழுவினால் போதும்.

தவறு. கைகளை நன்றாகத் தேய்த்து கழுவுவது, பிறரிடம் இருந்து ஆறு அடி தூரம் தள்ளி இருப்பது முதலியவை பின்பற்ற வேண்டிய சரியான வழிமுறையாகும். உங்கள் வீட்டில் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை கவனித்துக் கொள்ளவில்லை என்றால் வீட்டின் பகுதிகளால் பெரியளவில் ஆபத்தில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கல்யாணம் மற்றும் விஷேசங்களில் செய்யப்படும் கதம்ப சாம்பாரின் ரகசியம் இதுதாங்க!

tamiltips

ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டால் பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்களா? அசர வைக்கும் உண்மை!

tamiltips

சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?

tamiltips

பளபளப்பான மேனியழகு தரும் ஆரஞ்சு பழம் !!

tamiltips

கழிவறைக்கு செல்போனுடன் செல்பவரா நீங்கள்..? அந்த இடத்தில் பைல்ஸ் வரும் ஜாக்கிரதை! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

tamiltips

மூலநோயால் அவஸ்தைப்படுறீங்களா? இதையெல்லாம் சாப்பிடுங்க சீக்கிரம் குணமாகும்!

tamiltips