Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

குழந்தைகளின் சருமப் பிரச்னைகளும் அதன் தீர்வுகளும்…

குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது. சென்ஸிடிவ் என்று கூட சொல்லலாம். சூடு, பாக்டீரியாவின் தாக்கம், எச்சில் மூலமாககூட குழந்தையின் சருமம் பாதிக்கலாம். சரும பிரச்னைகளை நாம் அசாதாரணமாக கையாள கூடாது. உடலில் மிக பெரிய உறுப்பு என்னவெனில், அது சருமம்தான். தொற்றுகள், கெமிக்கல் போன்றவற்றிலிருந்து நம்மை பெரிதளவில் காப்பது சருமம்தான்.

உடலின் சூட்டைகூட, சரியான அளவில் பராமரிக்க சருமம் உதவுகிறது. உடல் சூட்டால், குளிர், பனி, பாக்டீரியா, தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு சரும பாதிப்பு ஏற்படுகிறது. அவை என்னென்ன? அதற்கான தீர்வுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

குழந்தையின் சரும வகையை எப்படி கண்டுபிடிப்பது?

சாஃப்ட், மென்மையான, எந்த இயல்பற்ற பிரச்னையும் இல்லாமல் இருந்தால் நார்மல் சருமம்.

கொஞ்சம் ரஃப்பான, மென்மையற்ற சருமமாக இருந்தால் உலர்ந்த சருமம் என அர்த்தம். கொஞ்சம் செதில் செதிலாக தெரியலாம்.

விரைவில் சிவப்பாகின்ற தன்மை இருந்தால் சென்ஸிடிவ் சருமம்.

Thirukkural

அதிகமான உலர்த்தன்மை, அரிப்பு எடுத்தல், எப்போதாவது சிவப்பு திட்டுகள் என இருந்தால் அதை எக்ஸிமா ப்ரோன் சருமம் என்பார்கள்.

உங்கள் குழந்தையின் சருமத்தை அறிந்து, அதற்கு ஏற்ற ஸ்கின் தயாரிப்புகள் வாங்குவது நல்லது.

சருமத்துக்கு வரக்கூடிய பொதுவான பிரச்னைகள்…

உலர் சருமம்

babies dry skin

வானிலை மாற்றம், அதிக வெயில், அதிக குளிர், உப்பு தண்ணீர், சுற்றுப்புற காற்று, உடலில் ஈரத்தன்மை குறைவது போன்றவற்றால் உலர் சருமமாக மாறும்.

அதிகமான சூடு உள்ள தண்ணீரில் குழந்தைகளை குளிக்க வைப்பதும் ஒரு காரணம்.

குழந்தைக்கு தரமான, சரியான மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவது நல்லது. ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி கிரீம், பேபி லோஷன் வாங்கலாம்.

ஹீட் ராஷ்

ஹீட் ராஷ், என்பது வியர்குரு என்று சொல்லலாம். பிறந்த குழந்தைகளின் வியர்வை சுரப்பிகள் முழுமையான வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, எளிதில் சுரப்பிகளில் பிளாக் ஏற்படலாம்.

வானிலை மாற்றம், வெயில் காலம், குழந்தைக்கு கனமான துணி அணிவது, குழந்தைக்கு ஒத்துக்கொள்ள துணி வகையை அணிவதால் ஏற்படும் அலர்ஜி, அதிக காய்ச்சல், ஹெவியான கிரீம், ஆயின்மென்ட் போன்றவை சரும சுரப்பிகளில் தடை ஏற்பட செய்கின்றன. இதனாலும் ஹீட் ராஷ் வரலாம்.

லேசான, பருத்தி உடை அணிவிப்பது நல்லது.

திக் மாய்ஸ்சரைஸர் தவிர்க்கலாம். தரமான, குழந்தையின் சருமத்துக்கு உகந்த ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி கிரீம், பேபி மில்க் + ரைஸ் கிரீம், பேபி லோஷன் பயன்படுத்தலாம்.

ஃபேன், வெளி காற்று உள்ளே வருவது போன்ற அறையில் குழந்தையை வைக்கலாம்.

நாப்பி ராஷ்

டயாப்பர் பாதிப்புகளால் வருவது இந்த நாப்பி ராஷ். முதல் ஒரு ஆண்டுக்குள் 35% சதவிகித குழந்தைகளுக்கு டயாப்பர் பாதிப்புகள் வரும். 9-12 மாத குழந்தைகளுக்கு, சற்று அதிகமாகவே இந்தப் பிரச்னை வரும்.

நீண்ட நேரமாக டயாப்பர் மாற்றாமல் இருப்பது, மலம், சிறுநீர் கிருமிகளால் ஏற்படும் பாதிப்பு, தொடர்ந்து டயாப்பர் பயன்படுத்துவதால் ஈரப்பதம் குறைந்து விடுதல் அல்லது ஈரப்பதம் அதிகமாக இருப்பது, டயாப்பர் கெமிக்கல் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாமல் போவது, பாக்டீரியா, பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படுவது ஆகியவை முக்கிய காரணம்.

பேபி டயாப்பர் அடிக்கடி மாற்றுங்கள்.

தரமான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி கிரீம் தடவலாம்.

குழந்தையை சுத்தம் செய்ய ப்ளெயின் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். அதன் பிறகு தரமான, மைல்டான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன்  பேபி கிரீம் பூசலாம்.

கிராடிள் கேப்

குழந்தை பிறந்து சில வாரங்கள் வரை இந்த கிராடிள் கேப் பெரும்பாலான குழந்தைகளுக்கு வரும். இது பொதுவான பிரச்னைதான்.

4-6 மாதங்கள் வரை நீடிக்கும். பின் இந்தப் பிரச்னை மறைந்துவிடும்.

சருமத்தில் பூஞ்சை/ஈஸ்டின் வளர்ச்சியே கிராடிள் கேப்பாக தெரியும். தாயின் வயிற்றில் இருந்தபோது, தாயின் மெட்டர்னல் ஹார்மோனும் ஒரு வகை காரணம்தான்.

வளர வளர இந்தப் பிரச்னை சரியாகிவிடும். சில குழந்தைகளுக்கு, இது அடாபிக் எக்ஸிமா என்ற சரும பிரச்னை வருவதற்கான முன் அறிகுறியாகவும் இருக்கலாம்.

முடியின் வேர்க்கால்கள், எண்ணெய் சுரப்பிகளில் இயல்பற்ற சுரப்பு நீடிப்பதால் வரக்கூடிய பிரச்னை. ஈஸ்ட், பாக்டீரியல் தொற்று ஆகியவை காரணமாக இருக்கும்.

கண்ணீர் வராத, மைல்டான ஷாம்புவான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பயன்படுத்துங்கள்.

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை கிராடிள் கேப் பிரச்னைகான தீர்வுகள். பேபி ஷாம்பு பயன்படுத்தினால் கிராடிள் கேப் பிரச்னையைப் போக்க உதவும்.

babies skin problem

அடாபிக் எக்ஸிமா

பெரியவர்கள், மழலைகள், குழந்தைகள் என அனைவருக்கும் இந்தப் பிரச்னை வரும்.

முதல் ஒர் ஆண்டுக்குள், சில குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை வரலாம். பல குழந்தைகள் தாங்கள் வளரும் போது, இந்த எக்ஸிமா சரும பிரச்னையிலிருந்து வெளிவந்து விடுகின்றனர்.

இந்தப் பிரச்னை வருவதற்கான சரியான காரணம் இதுதான் என்று உறுதியாக சொல்ல முடியாது.

மரபியல் ரீதியான நோய் எதிர்ப்பு திறன் குறைந்து இருந்தாலும் வரலாம்.

சோப், கிரீம், டிடர்ஜென்ட் அலர்ஜியும் இருக்கலாம். எனவே ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் சோப், கிரீம், டிடர்ஜென்ட் பயன்படுத்துங்கள். சுகாதாரமற்ற சூழல், தடுப்பூசி ஆகியவையும் காரணமாகலாம்.

சாதாரண தண்ணீர் அல்லது இளஞ்சூடான தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்டுங்கள்.

குளித்த பிறகு குழந்தையின் சருமத்தில் உள்ள ஈரத்தை, ஒத்தி ஒத்தி துடைத்து எடுங்கள்.

எக்ஸிமா போக மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி கிரீம்களைப் பயன்படுத்துங்கள்.

பேபி ஆக்னி (பரு)

பொதுவாக குழந்தைகளின் சருமத்தில் வரக்கூடிய பிரச்னை இது. பிறந்த குழந்தைகளுக்கு சில மாதங்களை வரை இப்படி வரும். பின்னர் சரியாகிவிடும்.

குழந்தையின் நகங்களை கட் செய்து, பராமரித்து வர வேண்டும். கிள்ளுவது, கைகளால் அழுத்தி சீழ் எடுப்பது போன்றவற்றை செய்ய கூடாது.

பருக்களைப் போக்க மருத்துவர் பரிந்துரைக்கும் கிரீம் பூசலாம்.

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பிராண்டின் ஸ்கின் கேர் தயாரிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்றது.

இதற்கு தேங்காய் எண்ணெயும் சிறந்த மருந்து.

கவனிக்க வேண்டியவை

வாசனை மிகுந்த பொருட்களைக் குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடாது.

குழந்தைக்கு புதிய ஆடையை அணிவிக்கும் முன் அதைத் துவைத்த பின்னே அணிவிக்க வேண்டும்.

குழந்தைகளை எப்போதும் மென்மையாகக் கையாள வேண்டும்.

குழந்தை இருக்கும் வீடுகள், சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.

லேசான உடைகள், வானிலைக்கு ஏற்ப உடைகள் அணிவிப்பது நல்லது.

எப்போதும் மைல்டான சோப், ஷாம்பு, டிடர்ஜென்ட் பயன்படுத்துவதே நல்லது.

அதிக கெமிக்கல்கள், வாசனை கொண்ட சோப் தவிர்க்கலாம்.

குளிக்கும் நேரம் 5-10 நிமிடங்கள் வரை இருப்பதே நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

tamiltips

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி…

tamiltips

குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

tamiltips

குழந்தைக்கு மழைக்கால நோய் வராமல் தடுக்க என்ன வழிகள்?

tamiltips

வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத 12 விசயங்கள்

tamiltips

குழந்தைக்கு தரும் லன்ச் பாக்ஸ்… 21 ரூல்ஸ்… எதில் அலட்சியம் வேண்டாம்?

tamiltips