Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாணவர்களிடம் இனி ஜாதியை கேட்க கூடாது! பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

தற்போது 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS இணையதளத்தில் இருந்தும், அந்தந்த மாவட்ட அளவிலும்  மாற்றுச்சான்றிதழ்கள் ( TC ) வழங்கப்பட ஏற்ப்பாடுசெய்யபட்டுள்ளது. மாணவரின் டி.சி.யில், Refer Community Certificate issued by Revenue Dept என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் மாணவர்களின் ஜாதிப் பெயரை குறிப்பிடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியாக சாதிச்சான்றிதழ் வழங்குவதால், டி.சி.யில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை மாறாக அந்த இடத்தை காலியாக விட்டு விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்  பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

எக்காரணம் கொண்டும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் ஜாதிய பெயரையோ குறியீடையோ தெரிவிக்க கூடாது என்றும் அப்படி தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 5 ஆண்டுகளாக அமலில் உள்ள போதும் சில தலைமை ஆசிரியர்கள் தவறுதலாக ஜாதிப் பெயரை டிசியில் குறிப்பிட்டுவிடுகின்றனர்.

இதன் காரணமாகவே திட்டவட்டமாக ஜாதி பெயரை குறிப்பிடக்கூடாது என்று கூறி சுற்றறிக்கை தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆண்மை குறைவா? நாட்டு மஞ்சளை அந்த இடத்துல தடவுங்க! பிறகு மாற்றத்தை பாருங்க!

tamiltips

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும்! என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

tamiltips

எப்போதும் உடல் சோர்வாகவும் தூக்க உணர்வுடனும் இருக்கிறதா? இது தான் அதற்கு காரணம்!

tamiltips

மேனிக்கு அழகு தரும் திராட்சை.. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் செய்திகளையும் பாருங்க..

tamiltips

கூவாகம் திருவிழா! மிஸ் 2019 திருநங்கை அழகியானார் நபீஷா!

tamiltips

கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொந்தரவு குறையுமா?

tamiltips