பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியம்! ஏன் எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியம்! ஏன் எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும். சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. 

முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும். லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும். வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும். 

விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும். 

பாட்டி வைத்தியம் வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும். 

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!