வளர்ந்து வரும் நகர்புற மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள கடுமையான மாற்றங்களின் காரணமாக. அத்தியாவசிய உணவு தேவைகளுக்காக தினமும் சுமார் 48 சதவீதம் பேர் வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்வதை விரும்புவதாகவும். அதன் காரணமாக ஆன்லைன் உணவு டெலிவரியில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஸ்விகி. ஊபர் மற்றும் சொமோட்டோ நிறுவனங்கள்.
சமீபத்திய காலங்களில் இந்த நிறுவனங்கள் பெரும் வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்திய இளைஞர்களின் அவசர தேவைகளுக்கான உடனடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் தளமாகவும் இருக்கிறது இந்த உணவு விநியோக நிறுவனங்கள்.
மேலும் தற்போதைய நாகரீக வளர்ச்சியின் பிடியில் சிக்கியுள்ள இந்தியர்கள். வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்து உண்பதை அதிகம் விரும்புவதாகவும், குடும்பங்கள் சகிதமாக அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில். இணையத்தின் வாயிலாக உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை விரும்புவதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இயந்திரத்தானமாக மாறியுள்ள வாழ்வியல் பழக்கங்கள் வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தங்களுக்கான நேர சேமிப்பை கருத்தில் கொண்டு. விரைவில் கிடைக்கக் கூடிய உணவுகளை அதிகப்படியாக நாடுவதாகவும். இதன் காரணமாக நேரம் மற்றும் உடல் சக்தியை மிச்சப்படுத்த நோக்கில் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களை நாடுகின்றனர் வாடிக்கையாளர்கள்.
இந்நிலையில் இணைய வர்த்தக உலகில் ஜாம்பவானாக வலம் வரும் அமேசான் நிறுவனம் உணவு டெலிவரியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்த சேவையில் அமேசான் களமிறங்க உள்ளதாகவும். இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் கட்டமரான் வெஞ்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த வணிக சந்தையில் ஈடுபட உள்ளது அமேசான் நிறுவனம்.
இந்த உணவு வினியோக வணிகம் அமேசான் பிரைம் நவ் அல்லது அமேசான் பிரெஷ் என்ற தளத்தில் இயங்கும் என சொல்லப்படுகிறது. தற்போது உலகம் முழுவதிலும் உணவு டெலிவரி செய்வதில் முன்னிணியில் இருக்கும் சோமேட்டோ.
ஊபர் மற்றும் ஸ்விகி நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமேசான் நிறுவனம் இருக்கும் என்றும். மற்ற நிறுவனங்களை காட்டிலும் டெலிவரி கட்டணங்கள் மற்றும் அதிகப்படியான தள்ளுபடிகள் கொடுத்து வாடிக்கையாளர்களை தங்களது பக்கம் கவர்ந்திழுக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணியன் கலியமூர்த்தி.