அதோடு, இதில் அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி 100 கிராம் பசலைக்கீரையில் 26 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் மெட்டபாலிச செயல்பாட்டிற்கு உதவி, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வெளியேற்றும். அந்தவகையில் பசலைக்கீரை கொண்டு டயட் மேற்கொண்டால் சிறப்பான பலன்கள் பல கிடைக்கும்.
இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது. பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.
மூளை, நரம்பு மண்டலம்: பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும்.