நாம் எண்ணெய் தேய்த்து குளிப்பது நம்முடைய உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதே சமயத்தில் எண்ணெய் தேய்த்து குளித்த பின்னர் தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது. அதே சமயத்தில் தாம்பத்ய உறவுக்குப் பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும். உடலுறவு செய்தபின் கடவுளை கும்மிடுவது உள்ளிட் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.
உறவுக்குப் பின்னர் ஏற்படும் வியர்வையில் உள்ள கிருமிகளால் நோய்கள் உருவாகும் என்பதாலேயே குளிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆண்கள் புதன், சனி, பெண்கள் செவ்வாய், வெள்ளியில் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். எண்ணெய் குளியல் உடம்புக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.
நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்கு காரகன் சனி பகவான். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது. சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்தது என்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனீஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.
எண்ணெய் குளியல் நாளில் குளிர்ச்சியான தயிர், மோர், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடக்கூடாது. அதே போல் எண்ணெய் குளியல் எடுத்த நாளில் தாம்பத்ய உறவு கண்டிப்பாக கூடாது. ஆனால் மகிழ்ச்சியான மன நிலையில் உள்ளவர்கள் உடலுறவை ஒத்திப்போட க்கூடாது எண்ணெய் குளியலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காலை, பிற்பகல், மதியம் என மூன்று முறை குளிப்பது அவசியமானது என சாணக்கியர் நீதி குறிப்பிடுகிறது. வெளியில் போய் விட்டு வந்தாலே கை கால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குளித்து விட்டால் ஆரோக்கியம் கூடுதலாகும் என்கிறார் சாணக்கியர்.
நாள் தோறும் குளிப்பது உடல், மன ஆரோக்கியம். இறுதிச் சடங்குக்கு சென்று விட்டு வந்த பின்னர் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்கிறது சாணக்கியர் நீதி. ஏன் என்றால் ஒருவர் இறந்த பிறகு அவரது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் சிதைந்து காற்றில் பரவிக் கொண்டிருக்கும். அப்போது நாம் அருகில் சென்று விட்டு வருவதால் அது நமக்கும் பரவும். எனவேதான் இறுதிச் சடங்கிற்கு சென்று வந்த பின்னர் குளிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
முடி வெட்டிய பின்னர் உடனே கண்டிப்பாக குளிக்க வேண்டும் இல்லாவிட்டால் உடலில் ஒட்டும் முடிகள் பாக்டீரியாக்களுக்கு உணவாகி விடும். சூரிய குளியல். மண் குளியல், மஹேந்திர ஸ்நானம், மந்திர ஸ்நானம் பற்றியும் மனோ ஸ்நானம் பற்றியும் கூறியுள்ளார் சாணக்கியர். உடல் உஷ்ணம் நீங்கும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகும்.
சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும். புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும். சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும். சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களினால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும்.