தென்கிழக்கு ஆசியாவில்
துரியன் பழங்கள் பிரசித்தமானவை. பலாப்பழம் போல வெளியில் கரடு முரடாக இருந்தாலும்
உள்ளே நாவில் நீர் ஊரச் செய்யும் அதன் சுவைக்கு ஏராளமானோர் அடிமைகளாக
உள்ளனர். மேலும் அவற்றில் உடல் நலத்துக்கான பல்வேறு சத்துக்களும் உள்ளன.
அதனைப் கடைக்காரர் ஒருவர்
தனது வியாபார யுக்திக்கு பயன்படுத்திக்கொண்டார். இந்தோனேஷியாவின் ஜாவா மாகாணத்தில்
உள்ள தசிக்மலயா நகரில் தனது அங்காடியில் கண்ணாடிப பெட்டியில் இரண்டு துரியன்
பழங்களை சிவப்பு சாட்டின் துணியில் வைத்தும் சுற்றிலும் மலர்களை வைத்தும் காட்சிப்
படுத்திய அவர், அவற்றுக்கு விலையாக தலா ஆயிரம் டாலர்களை நிர்ணயித்தார்.
அங்காடிக்கு வந்த
பலருக்கு அந்த விலை தங்கள் மாத ஊதியத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. வேறு
என்ன செய்வார்கள்? ஏக்கத்துடன் அந்த பழங்களுக்கு அருகே நின்று செல்ஃபி மட்டும்
எடுத்துக்கொண்டனர்.
அந்தப் பழங்களை விலை
கொடுத்து வாங்கவும் ஒருவர் இருந்தார். அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை
என்றபோதும் அவர் ஒரு துரியன் பிரியர் என்று கடைக்காரர் தெரிவித்தார்.
துரியன் பழங்களை
சாப்பிடும் போது தம்பதியினருக்கு குழந்தை விரைவில் உண்டாகும் என்கிற ஒரு நம்பிக்கை
உண்டு. அதற்காக ஒரு பழத்தை 71 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது எல்லாம் சிறிது
ஓவர் தான்.
அதே சமயம் அந்த கடைக்காரர் வெறும் 10 ரூபாய்
பெருமானம் உள்ள துரியன் பழத்தை சாமர்த்தியமாக 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
செய்துள்ளார்.