Tamil Tips
குழந்தை சமையல் குறிப்புகள் பெண்கள் நலன்

ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி? 2 சிம்பிள் ரெசிபிகள்…

குழந்தைகளுக்கு வளர்ச்சி மிகவும் அவசியம். மூளை வளர்ச்சியும் தசை வளர்ச்சியும் அத்தியாவசியம். குழந்தைக்கு, நான் நன்றாகதான் உணவு கொடுக்கிறேன். குழந்தை சாப்பிட மாட்டேங்குது… வளர்ச்சியும் குறைவாக இருக்கிறது. எடையும் குறைவாக இருக்கிறது எனக் கவலைப்படும் தாய்மார்களா நீங்கள்… உங்களுக்காகவே இந்தப் பதிவு (Homemade Protein Powder).

குழந்தைகள் வளர புரத சத்து பெரிதும் உதவும். தசை வளர்ச்சி, மூளை வளர்ச்சி, உள்ளுறுப்புகள் வளர்ச்சி ஆகியவற்றுக்கு புரத சத்து (Protein) மிக மிக முக்கியம்.

புரத சத்து (Protein) ஏன்?

  • உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
  • இதயம் பலப்பட செய்கிறது.
  • நுரையீரல் சீராக வேலை செய்ய உதவுகிறது.
  • எலும்புகள் வளர உதவுகிறது.
  • ரத்தம் உற்பத்தியாக உதவுகிறது.
  • உடலுக்கு 22 அமினோ ஆசிட் தேவை. குழந்தைகளால் 13 அமினோ ஆசிட்களை உருவாக்கிக் கொள்ள முடியும். மீதியை புரத சத்து நிறைந்த உணவுகளிலிருந்து பெற வேண்டி இருக்கும்.

0-6 மாத குழந்தைகளுக்கு புரத சத்தை எப்படி சேர்ப்பது?

0-6 மாத குழந்தைகளுக்கு, புரத சத்து மிக மிக முக்கியம். ஆதலால், தாய்மார்கள் புரத சத்து உணவுகளை சாப்பிட்டு தாய்ப்பால் கொடுத்தல் நல்லது. புரத சத்து குழந்தையின் உடலில் சேர்ந்தால் குழந்தைகள் 0-6 மாதத்துக்குள் இரண்டு மடங்கு எடையை அதிகரிக்க முடியும்.

புரத சத்து உள்ள உணவுகள்

  • நட்ஸ்
  • பருப்புகள்
  • பயறு வகைகள்
  • சிக்கன்
  • முட்டை

ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி?

புரத சத்து பல உணவுகளில் இருந்தாலும், அதை நாம் சரியாக சாப்பிடுகிறோமா எனத் தெரியாது. இதோ உங்களுக்காக ஹோம்மேட் புரோட்டீன் பவுடர்.

  • புரத சத்து = புரோட்டீன் பவுடர்

வீட்டிலே செய்யலாம் புரோட்டீன் பவுடர்

nuts for babies

Thirukkural

Image Source : BBC Good food

தேவையானவை

  • முந்திரி – ¼ கப்
  • பிஸ்தா – ¼ கப்
  • பாதாம் – ¼ கப்
  • வால்நட் – ¼ கப்
  • நிலக்கடலை – ¼ கப்

செய்முறை

  • பானில் முந்திரியை போட்டு லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும்.
  • மிதமான தீயிலே இருக்க வேண்டும்.
  • பிறகு, முந்திரியை தட்டில் எடுத்து போட்டு விடுங்கள்.
  • இப்போது, பிஸ்தா பருப்புகளை வறுக்கவும்.
  • பிறகு, பிஸ்தாவை தட்டில் எடுத்து போட்டு விடுங்கள்.
  • அதுபோல, பாதாம், வால்நட், நிலக்கடலை ஆகியவற்றை தனி தனியாக வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த அனைத்தையும் தட்டில் போட்டு ஆறவிடுங்கள்.
  • வறுத்து வைத்துள்ள பருப்புகள் சூடு ஆற வேண்டும்.
  • இப்போது மிக்ஸியில் ஒரு கைப்பிடி அளவு பருப்புகளை போட்டு சிறுக சிறுக மிக்ஸியை ஓட விடுங்கள். ஓரே அடியாக மிக்ஸியை ஓட விட கூடாது.
  • மிக்ஸியை ஒரே அடியாக ஓடவிட்டால், சூடு ஏறி பவுடரில் எண்ணெய் பிசுக்கு ஏற்பட்டு சீக்கிரம் கெட்டு விடும்.
  • ஒரு கைப்பிடி எடுத்து அரைத்த பவுடரை, உலர்ந்த தட்டில் போட்டு சூடு ஆற விடுங்கள்.
  • ஸ்பூனால் கிளறி, பெரிய பருப்பு துகள்கள் இருக்கிறதா எனப் பரிசோதித்து கொள்ளுங்கள்.
  • மீண்டும் மீதமுள்ள பருப்புகளை போட்டு அதேபோல சிறுக, சிறுக மிக்ஸியை ஓடவிட்டு அரைக்கலாம்.
  • தட்டில் போட்டு பரப்பி உலர விடுங்கள்.
  • சூடு ஆறியதும், இதை உலர்ந்த டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.
  • அவ்வளவுதான்… சத்துள்ள ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் ரெடி.

homemade protein powder for babies

Image Source: Veg recipes of india

இதையும் படிக்க : குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி?

யார் சாப்பிடலாம்?

  • கர்ப்பிணிகள் பாலில் கலந்து குடிக்கலாம்.
  • தாய்ப்பால் ஊட்டுபவர்களும் பாலில் கலந்து குடிக்கலாம். இது உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மூலமாக சேரும்.
  • 6 மாத குழந்தைகள் முதல் ப்யூரி, ஜூஸ், ஹோம்மேட் செர்லாக், இனிப்பு கஞ்சி, பழக்கூழ் ஆகியவற்றில் கலந்து கொடுக்கலாம்.
  • 1-3 வயதுள்ள குழந்தைகளுக்கு பசும்பாலில் கலந்து கொடுக்கலாம்.
  • உடற்பயிற்சி செய்யும் பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் கூட இந்த பவுடரை ஜூஸில் கலந்து குடிக்கலாம். பாலில் கலந்தும் குடிக்கலாம்.
  • ஜிம்முக்கு செல்வோருக்கான, சிறந்த ஊட்டச்சத்து உணவு இது.

புரோட்டீன் ஷேக் செய்வது எப்படி?

protein shake for babies

Image Source : Pralines and greens

தேவையானவை

  • வாழைப்பழம் – 1
  • ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 2 டேபிள் ஸ்பூன்
  • காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய் பால் – 1 டம்ளர்

செய்முறை

  • ஜூஸ் போடும் மிக்ஸி ஜாரில், வாழைப்பழம், புரோட்டீன் பவுடர், தேன், பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அவ்வளவுதான் ஹோம்மேட் புரோட்டீன் ஷேக் ரெடி.
  • தேன் பிடிக்காதவர்கள் பனை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

யார் சாப்பிடலாம்?

  • கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டுபவர்கள், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், உடற்பயிற்சி செய்வோர், ஜிம்முக்கு செல்வோர், டீன் ஏஜ் பருவத்தினர் என அனைவரும் சாப்பிடலாம்.

இதையும் படிக்க : ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

புரோட்டீன் தோசை செய்வது எப்படி?

protein dosa for babies

Image Source : Sailus food

தேவையானவை

  • இட்லி மாவு – 2 கரண்டி
  • கேரட் ப்யூரி – 2 டேபிள் ஸ்பூன்
  • புரோட்டீன் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  • வறுத்த ரவா – 1 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

  • இட்லி மாவில் புரோட்டீன் பவுடர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
    இதில் கேரட் ப்யூரியும், வறுத்த ரவாவும் சேர்த்துக் கலக்கவும்.
  • இப்போது சூடான தவாவில் மெத்தென தோசை ஊற்றி, இருபுறமும் நெய் விட்டு தோசையை திருப்பி போடவும்.
  • அவ்வளவுதான்… புரோட்டீன் தோசை தயார்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி? 

யார் சாப்பிடலாம்?

  • 6 மாத குழந்தைகளுக்குகூட கொடுக்கலாம்.
  • குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி…

tamiltips

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை பராமரிப்பது எப்படி?

tamiltips

ஹோம்மேட் போர்ன்விட்டா சுவையில் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?

tamiltips

குட்டிஸ்க்கு பிங்கர் புட்ஸ் எப்போது தரலாம்?சில பிங்கர் புட்ஸ் டிப்ஸ்…!!

tamiltips

கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

tamiltips

0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?

tamiltips